தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் அதிகாரியிடம் நகராட்சி தலைவர் மனு
ராசிபுரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று அதிகாரியிடம் நகராட்சி தலைவர் மனு அளித்தார்.
ராசிபுரம்
ராசிபுரம் நகருக்கு தினந்தோறும் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராசிபுரம் நகருக்கு குடிநீர் தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரிடம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், நகராட்சி பொறியாளர்கள் கிருபாகரன், கார்த்திகேயன், கவுன்சிலர்கள் தேவிபிரியா, யசோதா, சாரதி, நாகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், காதர் பாட்சா, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.