ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-06-05 21:17 GMT

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார்.

ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள மல்யுத்த வீராங்கனைகளிடம், பா.ஜ.க. எம்.பி.யும், மல்யுத்த விளையாட்டு ஆணையக்குழுத் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர், தொழிற்சங்கத்தினர், மாதர், இளைஞர் சங்கத்தினர் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்