யூனியன் அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டியில் யூனியன் அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-20 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை நேற்றுகாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட உதவி செயலாளர் ஜி.பாபு தலைமையில் இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலையூர் பிரதான சாலையில் இருந்து மறவர் காலனிக்கு செல்லும் இணைப்பு சாலையை செப்பனிட வேண்டும். தாமஸ் நகர் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் அங்குள்ள பெரிய வாய்க்காலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரியை சந்தித்து மனு கொடுத்து விட்டுகலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்