மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் கன்னியாகுமரி வருகை
மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
மத்திய மந்திரி வருகை
மத்திய உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு அவரை கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜ.க. பார்வையாளர் சுபாஷ், முட்டப்பதி தர்மகர்த்தா மனோகரச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவில் கன்னியாகுமரியில் ஓய்வெடுத்த அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார். காலை 10.30 மணிக்கு மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
மேலும் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.