கோவையில் மத்திய மந்திரி அஜய்குமார் மிஷ்ரா ஆய்வு
கோவையில் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஷ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஷ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய மந்திரி ஆய்வு
மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஷ்ரா நேற்று கோவை வந்தார்.
பின்னர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோவை மாவட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய இணை மந்திரி அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதன் வளர்ச்சிகள் தொடர்பாகவும் அரசு துறை அதிகாரிகளிடம் மத்திய மந்திரி கேட்டறிந்தார்.
பின்னர் அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். மேலும் இலங்கை அகதிகள் முகாம் தொடர்பாக அதில் உள்ள குறைகள் குறித்தும் கேட்டுக்கொண்டார்.
வாலாங்குளத்தை பார்வையிட்டார்
இதில் கலெக்டர் சமீரன், மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இணை செயலாளர் சஞ்சீவ் சேகல், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா உக்கடம் வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி, மற்றும் அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் பணிகள், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.