வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது
வலங்கைமான்;
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், ஒன்றிய ஆணையர்கள் கலைச்செல்வன், பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெட்டாற்றின் குறுக்கே நரசிங்கமங்கலம் தெற்கு தெருவில் இருந்து, மாத்து ஊராட்சி கிராமமான, புல்லவராயன் தோப்பு கிராமத்தை இணைக்கும் வகையிலும், வலங்கைமானை அடுத்த அரித்துவாரமங்கலம் கிராமத்தில் இருந்து, தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகில் உள்ள உக்கடை கிராமத்தை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே 2 பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது குறித்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.