ஒரு நாள் முன்னதாக உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழகம் வருகை; எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், மத்திய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக நாளை இரவே டெல்லியில் இருந்து அமித்ஷா, சென்னை வர உள்ளார். இதற்காக 11-ம் தேதி சென்னை வர இருந்த அமித்ஷா தற்போது நாளை இரவே சென்னை வர உள்ளார்.அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.