வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டுரங்கன் கூறினார்.
கொடியாலம் ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று உறுப்பினர் தீபா வெங்கடேசன் பேசினார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
பின்னர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் வழங்கினார்.