தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

தூய்மை பணியாளர்களுக்கு சீருடையை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-12-24 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) ஹரிகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பரமகுரு, புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தன்னுடைய சொந்த செலவில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க தொகையையும் வழங்கினார்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு புற்றுநோய் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, இளைஞரணி சரவணன், மாணவர் அணி உதயகுமார், கார்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், அலமேலு, வேல்ராஜ், புஷ்பம், ராஜா ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்