பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் சாவு
பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் சாவு
வேளாங்கண்ணி அருகே அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அந்த வாலிபர் இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.