வாகனம் மோதி அடையாளம் தெரியாத பெண் சாவு

வாகனம் மோதி அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தார்.

Update: 2022-06-08 17:56 GMT

கீழப்பழுவூர் 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தின் அருகே ஒரு வழிபாதை ஒன்று உள்ளது. அங்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து மேலப்பழுவூர் கிராம நிர்வாக அதிகாரி ஜார்ஜ் வாஷிங்டன் கீழப்பலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்