அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து இறந்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிளாட்பாரம் படி ஏற்றுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து பயணிகள் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அந்த நபரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.