ெரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு
மயிலாடுதுைற அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ெரயில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில் ெரயில் நிலையத்தை கடந்து சென்றபின் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ெரயில் நிலையம் அருகிலேயே அடிபட்டு உடல் சிதைந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இறந்த மூதாட்டி சந்தன நிறத்தில் பூப்போட்ட சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
தகவல் அறிந்ததும் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு
இதுகுறித்து ரெயில்ேவ போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மூதாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மயிலாடுதுறை, பிப். 9-
மயிலாடுதுைற அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ெரயில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில் ெரயில் நிலையத்தை கடந்து சென்றபின் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ெரயில் நிலையம் அருகிலேயே அடிபட்டு உடல் சிதைந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இறந்த மூதாட்டி சந்தன நிறத்தில் பூப்போட்ட சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
தகவல் அறிந்ததும் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு
இதுகுறித்து ரெயில்ேவ போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மூதாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.