வெள்ளகோவில் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில், காங்கயம் ஆய்வாளர் அபிநயா, செயல் அலுவலர் ராமநாதன் முன்னிலையில் நடந்தது. 2022 ஜூன் 8-ந்் தேதிக்கு பிறகு நேற்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 277 வசூல் இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.