உண்டியல் காணிக்கை ரூ.8¼ லட்சம்

Update: 2023-05-10 16:05 GMT


திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நந்தகுமார் (கரூர் மாவட்டம்) தலைமையில் கோவிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் பிரிக்கப்பட்டது. கோவில் செயல் அதிகாரி சரவணபவன், ஆய்வாளர் கணபதி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

கோவில் அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் மூலமாக காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. மொத்தம் ரூ.8 லட்சத்து 38 ஆயிரத்து 197 இருந்ததாக தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை தொகை இதுவாகும்.

மேலும் செய்திகள்