ஒண்டர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

தென்காசி திரவியநகர் ஒண்டர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.

Update: 2022-10-26 18:45 GMT

தென்காசி திரவிய நகர் ஒண்டர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அலுவலர் கவிதா கலந்து கொண்டு பேசினார். தென்காசி நிலைய அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 8-ம் வகுப்பு மாணவர் ஞான அபியான், 9-ம் வகுப்பு மாணவிகள் தர்ஷினி, கவிதா ராணி ஆகியோருக்கு தீயணைப்பு துறை அதிகாரி கவிதா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் செல்வராஜ் தீயணைப்பு வீரர்களை கவுரவித்தார். பள்ளி தாளாளர் செல்வி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். முடிவில் பள்ளி முதல்வர் மகேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்