18 வயதுக்குட்பட்டவர்கள்ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கலை, கல்வி, கலாசாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்குகிறது. அதன்படி, இந்த விருதுக்கு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகள் https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.