பிரஹன்னாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
வடக்கு மடவிளாகத்தில் உள்ள பிரஹன்னாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் திருக்கைலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை வடக்கு மடவிளாகத்தில் உள்ள பிரஹன்னாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 68-ம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா கடந்த 21-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்பாள் ஊஞ்சல் உற்சவ திருவிழா நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை தம்பிரான் ஸ்ரீமத் வேலப்ப சுவாமிகள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீபாராதனை காட்டினார். தொடர்ந்து அவர் முன்னிலையில் அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.