ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி நேற்று உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், வேங்கடேசப் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த மாதம் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.