புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில்பங்கேற்ற உடுமலை மாணவிக்கு பாராட்டு

Update: 2023-06-01 15:55 GMT


உடுமலையைச் சேர்ந்தவர் உமா நந்தினி (வயது19).இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணன் அரசு பள்ளி ஆசிரியராகவும், தாயார் கண்ணம்மாள் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாகவும் உள்ளனர்.

 தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட உமா நந்தினி தேவாரத்தில் உள்ள 795 பதிகங்களில் 8,239 பாடல்களை 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் (இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) இடம் பெற்றார். இதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறிமுகமானார்.

 இந்த நிலையில் டெல்லியில் சமீபத்தில் நடந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு உடுமலை பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்