முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை

முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை

Update: 2022-09-09 12:19 GMT

உடுமலை

உடுமலைஅரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற1 6-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு கலைக்கல்லூரி

உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம்கல்வி ஆண்டிற்குரிய முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில்மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்

முதுநிலை பட்டப்படிப்புகளில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) என மொத்தம் 265 இடங்கள் உள்ளன.

இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளத்தின் மூலமாக வருகிற 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் செல்போன், மடிக்கணினிமற்றும்கணினி மூலமாக விண்ணப்பிக்கலாம்.முதலில் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் முதலிய விபரங்களை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், தான் சேரவிரும்பும் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில், சேரவிருக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் 20-ந் தேதி www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில்வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 21-ந் தேதி முதல் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்