உடுமலை கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய 5 கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்
தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இதை அமல்படுத்துவதற்காக உடுமலை நகராட்சி சுகாதாரப்பிரிவினர் கடைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய மற்றும் விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் உடுமலை நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், செல்வம், ராஜ்மோகன் ஆகியோர் உடுமலை பழனி சாலை, கல்பனா சாலை, சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
5 கடைகளுக்கு அபராதம்
அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய ஒரு பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம், 3 பழவண்டிக்கடைகாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், கடலை விற்பனை செய்யும் ஒரு தள்ளு வண்டிக்கடைக்காரருக்கு ரூ.1,000 என 5 கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். அந்த கடைகளில் இருந்து 85 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் தொடர்ந்து பிளாஸ்டிக்கவர்களை பயன்படுத்திவந்ததாக 3 பழவண்டிக்கடைகளில் இருந்து தராசுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்