முதியவர்களுக்கு புத்தாடை, கேக் வழங்கி கவுரவிப்பு

Update: 2022-12-19 14:32 GMT


உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆலய உறுப்பினர்களில் 70 வயது முதியவர்கள் புத்தாடை மற்றும் கேக் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு, அனைவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் மர விழா நடந்தது. பின்னர் ஆலய வளாகத்தில் ஆண்கள், பெண்கள் ஐக்கிய சங்கம் மற்றும் ஜெபக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

கடந்த 1-ந்தேதி கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல் பவனி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல் குழுவினர், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினசரி ஒவ்வொரு பகுதியாக ஆலய உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல் பவனி நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்