உடுமலை மத்திய பஸ் நிலையத்தில், பஸ்கள் வரும்வரை காத்திருக்கும் பயணிகள் உட்காருவதற்காக ஆங்காங்கு இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை போதுமானதாக இல்லாத நிலையில் பல பயணிகள் பஸ் வரும்வரை நின்று கொண்டுள்ளனர். இந்த நிலையில் உட்காருவதற்கு வைக்கப்பட்டுள்ள சில இருக்கைகளும் உடைந்துள்ளன.சில பயணிகள் வேறு வழியின்றி, இருக்கை இல்லாமல் பழுதடைந்துள்ள இரும்பு பட்டைமீதும் உட்கார்ந்து கொள்கின்றனர். அதில் உட்காரும் பயணிகள் கவனமாக உட்காராவிட்டால் சாய்ந்து கீழே விழ நேரிடும்.அதனால் பழுதடைந்துள்ள இருக்கைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.