உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்றதையடுத்து தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இட்டமொழி:
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்றதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நாங்குநேரி
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்றதையடுத்து நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பஸ் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள் மந்திரம், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பரப்பாடி இலங்குளத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் என்.ஞானராஜ், ஒன்றிய அவைத் தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை- பணகுடி
அம்பை நகர தி.மு.க. சார்பில் பூக்கடை பஜாரில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணகுடி பஸ்நிலையம் முன்பு பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் கோபி கோபாலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.