உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-04 11:25 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிைல வகித்தார். செயல் அலுவலர் ரேவதி வரவேற்றார்.

கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.

இதில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், மரியஜோசப், சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்