உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஒகளூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-27 18:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட மங்களம்பேட்டையை அடுத்துள்ள ஒகளூரில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கு.கா.அன்பழகன் தலைமை தாங்கினார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் அண்ணாதுரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்