சனாதனத்தின் உண்மையான அர்த்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு புரியவில்லை

சனாதனத்தின் உண்மையான அர்த்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு புரியவில்லை என்று மயிலாடுதுறையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-09-10 18:45 GMT


சனாதனத்தின் உண்மையான அர்த்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு புரியவில்லை என்று மயிலாடுதுறையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பேட்டி

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், விலைவாசி உயர்வு, டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

சனாதனத்தை பற்றி புரியவில்லை

இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. உதயநிதி ஸ்டாலின் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பழைய அரசியலை கையில் எடுக்கிறார்.

நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண்துடைப்பு. சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு புரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி 10 நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள். இதனால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ என்ன பலன். பிரித்தாலும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயல் இது.

பாரத் என்று மாற்றினால்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.

மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப்போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்