உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை வருஷாபிசேகத்துடன் தொடங்கியது, மாலை 6 மணிக்கு நாட்டில் வறுமை நீங்கி, செழுமை வேண்டி பாடல்கள்பாடி சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடந்தது. இரவு 10 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு ஒருமணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி பவனி வந்தது. நேற்று காலை 10 மணி, இரவு 9 மணிக்கு வில்லிசை நடந்தது. பின்னர் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 10 மணிக்கு வான வேடிக்கையுடன் முனளப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று( புதன்) காலை 10 மணிக்கு மஞ்சல் பெட்டி ஊர்வலம், காலை 11 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் வில்லிசை, ் மாலை 3 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்