உச்சிமாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழா
கமுதியில் உச்சிமாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழா நடைபெற்றது.
கமுதி,
கமுதி மேட்டுதெரு உச்சிமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்று வந்தது. கமுதி மாதர் சங்கம் சார்பில் கோவிலின் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தெய்வபுராண பாடல் பாடி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு செண்டை மேளத்துடன் முக்கிய நகர் வீதிகளில் சென்று கோவிலில் சென்று அம்மனுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை கமுதி பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய நகர் வீதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேட்டு தெரு இளைஞர் மறுமலர்ச்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.