ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய உறவுக்கார பெண்கள் 2 பேர் கைது

திருமங்கலத்தில் ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய உறவுக்கார பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-28 19:51 GMT

திருமங்கலம்,

திருமங்கலத்தில் ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய உறவுக்கார பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

25 பவுன் நகை திருட்டு

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராமு (வயது 35). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுந்தரலேகா(29). இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு தையல் வகுப்பிற்காக சுந்தரலேகா சென்றார்.

பின்னர் அன்று மாலை வந்து பார்த்தபோது பூட்டிய வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுதொடர்பாக சுந்தரலேகா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

2 பெண்கள் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சுந்தரலேகா வீட்டிற்கு ராமுவின் உறவினர்முறை அண்ணன் ராஜசேகர் மனைவி விஜயகுமாரி என்ற பேச்சியம்மாள், இவருடைய ேதாழி நாக துர்கா ஆகிய இருவரும் ராமுவின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விஜயகுமாரி, நாக துர்கா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்திய போது இருவரும் சேர்ந்து வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்