மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-30 21:03 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வானரங்குடி பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலன் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தார். அப்போது அப்பகுதியில் மதுவிற்ற ஜெயக்கொடி (வயது 57) என்பவரை கைது செய்தார். அந்த பெண்ணிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதேபோல, பூதலூர் வெண்ணாற்றங்கரை பகுதியில் மதுவிற்ற வல்லம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜாவை(40) பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கைது செய்தார். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





Tags:    

மேலும் செய்திகள்