சென்னையை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கிணற்றில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு

அரக்கோணம் அருகே சென்னையை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கிணற்றில் பிணமாக கிடந்தனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-19 14:23 GMT


அரக்கோணம் அருகே சென்னையை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கிணற்றில் பிணமாக கிடந்தனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தவர்கள்

அரக்கோணத்தை அடுத்த காவனூரில் விவசாய கிணற்றில் இரண்டு வாலிபர்கள் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாய கிணற்றில் பிணமாக கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்கள் யார், எந்த ஊர் என்பது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சென்னை மாதவரத்தை சேர்ந்த ரோஷன் (வயது 28), கார் டிரைவர். பெரம்பூரை சேர்ந்த யுவராஜ் (38) என்பது தெரியவந்தது.

கிணற்றில் பிணமாக கிடந்தனர்

ரோஷனின் உறவினருடைய விவசாய நிலம் காவனூரில் உள்ளது.  ரோஷன், யுவராஜ் ஆகிய இருவரும் காவனூரில் உள்ள உறவினர் விவசாய நிலத்திற்கு வந்துள்ளனர். அப்போது கிணற்றில் குளித்ததாக கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாததால் யுவராஜ் நீரில் மூழ்கியதாகவும், அவரை மீட்க முயன்றபோது ரோஷனும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்