பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது

Update: 2022-05-24 19:28 GMT

நெல்லை:

நெல்லை சி.என்.கிராமம் பகுதியை சேர்ந்தவர் உடையார் (வயது 40). இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர் குடும்ப தகராறு காரணமாக மேல தாழையூத்து பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று உடையார், அவருடைய உறவினர் சி.என். கிராமம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் கதவு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து உடையார், நாகராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்