பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-02 14:57 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி

பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் கோவிந்தாபுரம், கணபதிபாளையம் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது கணபதிபாளையம் டாஸ்மாக் அருகில் மொபட் டில் சாக்கு மூட்டைகள் இருப்பதை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அங்கு நின்ற 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். மொபட்டில் இருந்த மூட்டை களை போலீசார் பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆனைமலையை சேர்ந்த கார்த்திக் (வயது 25), ஆனந்த் (33) ஆகியோர் என்பதும், அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் மற்றும் 20 சாக்கு மூட்டைகளில் இருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்