பள்ளி ஆசிரியா் வீட்டில் டி.வி. திருட்டு; வாலிபர் கைது

நெல்லையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் டி.வி. திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-20 20:35 GMT

நெல்லை மேலப்பாளையம் வீரமாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் எடிசன். இவருடைய மனைவி இந்திரா எடிசன் (வயது 77). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். சம்பவத்தன்று இவர் தனது பேரனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை திருடி சென்றார். இதுகுறித்து இந்திரா எடிசன் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் தில்லை மகாராஜன் (24) என்பவர் டி.வி.யை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்