தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குனர் பொறுப்பேற்று கொண்டார்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த என்.சுப்பிரமணியன், தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பிரிவு தலைவராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து விமான நிலைய இயக்குனராக ஆந்திரா மாநிலம் கடப்பா விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த பி.சிவபிரசாத் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய இயக்குனர் சிவபிரசாத் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பணி மாறுதலாகும் என்.சுப்பிரமணியன் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அகமதாபாத், ஐதராபாத், விசாகபட்டினம், திருச்சி, கடப்பா விமானநிலையங்களில் இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது தூத்துக்குடியில் பொறுப்பேற்று உள்ளார். நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.