தூத்துக்குடி பனிமயமாதா பேராலாய திருவிழா:ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி பனிமயமாதா பேராலாய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. ஆனாலும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல.
ஆகையால் வருகிற 5-ந் தேதி வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறைக்கு பதிலாக 12.8.2023 அன்று மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.