தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளதாக, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-24 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிறந்தநாள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டும் நிகழச்சியும், 11 மணிக்கு கலைஞர் அரங்கில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாலை 5 மணிக்கு கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

27-ந் தேதி

27-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகலாபுரம் முதியோர் இல்லத்தில் காலை, மதியம் உணவு வழங்குதல், மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட முதியோர், ஊனமுற்றோர் இல்லங்களில் மதிய உணவு வழங்குதல், எட்டயபுரம் மனநல காப்பகத்தில் மதியம் உணவு, மாலை 4 மணிக்கு அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், 28-ந் தேதி காலை 10 மணி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்டம் வழங்குதல், 11 மணி பாண்டவர் மங்கலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், 12 மணி நாலாட்டின் புதூரில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், மாலை 4 மணி விளாத்திகுளத்தில் மரக்கன்று நடுதல்,

மருத்துவ முகாம்

29-ந் தேதி காலை 10 மணி கயத்தாறு, 11 மணிக்கு செட்டிக்குறிச்சியில், 12 மணிக்கு கழுகுமலையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், 30-ந் தேதி காலை 10 மணிக்கு புதூர், மாலை 4 மணி குறுக்குச்சாலையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வருகிற 3-ந் தேதி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம், 28.12.22 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி திரேஸ்புரம் ஆக்ஸிலியம் பள்ளியில் பொது மருத்துவ முகாம், 29.12.22 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி திரேஸ்புரம் ஆக்ஸிலியம் பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்