தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டி:முதலிடம் பிடித்த தூத்துக்குடி, சிந்தலக்கரை அணிகளுக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி, சிந்தலக்கரை அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-09-04 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி, கோவில்பட்டி அணிகளுக்கு வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு பரிசுக்கோப்பையை வழங்கினார்.

கபடி போட்டி

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம், கோவை ஈஷா யோகா மையம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான, ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கபடி அணியும், சாத்தான்குளம் பாரத மாதா கபடி அணியும் விளையாடின. இதில் தூத்துக்குடி அணியினர் 41-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் சிந்தலக்கரை நேசகரம் அணியும், கோவில்பட்டி சூப்பர் செவன் அளியும் விளையாடின. இதில் சிந்தலக்கரை அணி 28-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றன.

பரிசளிப்பு விழா

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வரவேற்று பேசினார். ஈஷா யோகா ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், தேன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாவட்ட கபடி கழக உதவி செயலாளர்கள் அந்தோணி, ராஜா, ஈஷா யோகா ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், தீபிகா, நடுவர் குழு இணை கன்வீனர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்