தூத்துக்குடி மாநகரகாங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-24 18:45 GMT

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் சிட்டி டவரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ் சுடலையாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சமீபத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டு கைதானவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி, ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் தொண்டர்கள் அயராது உழைப்போம். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தூத்துக்குடி- கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலை உடனடியாக இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது, புதிய கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியம், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமிவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்