தூத்துக்குடி 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் பராமரிப்பு பணிகள் கடந்த 3-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "ரெயில்வே மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டு உள்ளது. இந்த பழுதை சீரமைக்க பள்ளி விடுமுறை நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.