கயிறு இழுத்தல் போட்டி: கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அசத்தல்

கயிறு இழுத்தல் போட்டியில் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அசத்தினர்.

Update: 2023-06-28 18:44 GMT

கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியை கொங்கு அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் விசா.மா. சண்முகம், பொருளாளர் வீரப்பன், துணைத்தலைவர் அம்மையப்பன், இணைச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளியின் தாளாளர் வாசுதேவன் வரவேற்று பேசினார்.

கரூர் மாவட்ட கயிறு இழுக்கும் சங்க தலைவர் யுவராஜா, செயலாளர் வடிவேல் ஆகியோர் போட்டியை நடத்தினர். போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் கொங்கு பள்ளி மாணவிகள் 6 கோப்பைகளும், அனைத்து பிரிவுகளில் பதக்கங்களும் பெற்று அசத்தி சாதனை புரிந்தனர். இதையடுத்து போட்டிகளில் அசத்திய மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பகம், துணை முதல்வர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்