திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணியளவில் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.