தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய  100 கிலோ கஞ்சா பார்சல்கள்

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த 100 கிலோ கஞ்சா பார்சல்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினார்கள்.

Update: 2023-08-21 18:44 GMT

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த 100 கிலோ கஞ்சா பார்சல்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினார்கள்.

கஞ்சா பார்சல்கள்

ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட பகுதியில் பல இடங்களில் கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர போலீசார் மற்றும் தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கடலோர போலீசாரும், தனுஷ்கோடி போலீசாரும் இணைந்து தனுஷ்கோடி கடற்கரையில் பல இடங்களில் கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்களை சேகரித்தார்கள். கடலோர போலீசார் சேகரித்த 33 பார்சல்களில் தலா 2 கிலோ வீதம் 66 கிலோ கஞ்சா இருந்தது. இதேபோல் தனுஷ்கோடி போலீசார் சேகரித்த 17 பார்சலில் 34 கிலோ கஞ்சா இருந்தது..

போலீசார் தீவிர விசாரணை

மீன்பிடி படகில் இந்த கஞ்சா பார்சல்கள் இலங்கைக்கு கடத்திச் கொண்டு சென்ற முயன்றபோது நடுக்கடலில், இந்திய கடற்படை ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் கஞ்சா பார்சல்களை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா பார்சல்களை கடத்திச் சென்ற மீன்பிடி படகு எது? கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்