கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை சிறப்பு முகாம்

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-23 18:09 GMT

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் காசநோய் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. ஜெயில் அலுவலர் மோகன்குமார், ஜெயில் நலஅலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு ஜெயில் மருத்துவர் பிரகாஷ் அய்யப்பன் தலைமை தாங்கி காசநோயின் அறிகுறிகள் பற்றியும், நோய் வராமல் தடுப்பது குறித்தும் விளக்கி கூறினார். மேலும் தமிழ்நாடு அரசின் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனத்தின் மூலம் கைதிகளுக்கு காசநோய் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 40 கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்