காசநோய் கண்டறியும் முகாம்
சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மீரான்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் பாபு தலைமையில் தென்திருப்பேரை காசநோய் பணியாளர்கள் ஜெயவண்ணன், சுரேஷ், பார்த்திபன், சங்கரலிங்கம், செவிலியர்கள் மெர்சி, மகேஸ்வரி, நாகவள்ளி, சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் மற்றும் ஆஷா, டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்று கணக்கெடுப்பு நடத்தினர். இதில் 1,250 பேருக்கு கணக்கெடுக்கப்பட்டதில் 12 பேருக்கு அறிகுறி இருந்ததையடுத்து அவர்களது பரிசோதனை மாதிரிகள் பகுத்தாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து துணை சுகாதார நிலையம் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. தொடந்து டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மலேரியா குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நேபல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.