காசநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம்
சிவகிரியில் காசநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காச நோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட துணை இயக்குனர் காசநோய் டாக்டர். வெள்ளைச்சாமி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்சாந்தி சரவணபாய் ஆகியோர் தலைமை தாங்கினர். விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத் தலைவர் காளீஸ்வரி, சிவகிரி பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, விசுவநாதப்பேரி பஞ்சாயத்து எழுத்தர் உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் அமுதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.