கோவில்பட்டியில் காச நோய் விழிப்புணர்வு நாடகம்
கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காச நோய் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக உலக காசநோய் வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடந்தது. பள்ளித்தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் கலந்து கொண்டு பேசினார். விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த மாணவிகளை பாராட்டி அவர் புத்தகம் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை காசநோய் மருத்துவர் வினோதினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இசை ஆசிரியை அமலபுஷ்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் நன்றி கூறினார்.