காசநோய் விழிப்புணர்வு கூட்டம்

ரங்கப்பனூரில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம்

Update: 2023-03-16 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காச நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனாகாமராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய காச நோய் மருத்துவ அலுவலர் துரைராஜ் காச நோய் ஏற்படும் விதம், சிகிச்சை அளிக்கும் முறை, நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதிகாபாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்